பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதனைத்தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் இறுதியாக தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் சைரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தநிலையில் அவர் இயக்குநர் A.R. ஜீவா இயக்கத்தில் 'Lock Down' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்திற்கு N. R. ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
'Lock Down' திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ள நிலையில்,அண்மையில் இத்திரைப்படத்தின் Teaser வெளியாகி நல்லவரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதலாவது பாடல் தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் முதல் பாடலான "லாவா லாவா" என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.