சப்போட்டா பழமானது கலோரிகள் நிறைந்த சுவையான பழமாகும். இந்தப் பழத்தை சுவையான வெப்பமண்டலப் பழம் என்றும் பலர் குறிப்பிடுகின்றனர். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் இந்தப் பழத்தில் உள்ள சத்துக்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இந்தப் பழத்தை உட்கொள்வதன் மூலம் அஜீரணக் கோளாறுகளில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
சப்போட்டா பழத்தில் காணப்படும் குளுக்கோஸ், எமது உடலிற்கு புத்துணர்ச்சியைத் தருகின்றது.
இந்தப் பழத்தில் கல்சியம், இரும்புச்சத்து, விற்றமின்கள்,தாதுக்கள் என்பன நிறைந்துள்ளன. இவை எமது எலும்புகளின் சக்தியை அதிகரித்து அவற்றை வலுப்படுத்த உதவுகின்றன.
அத்துடன் சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இது எமது உடலிலுள்ள தேவையற்ற கழுவுகளை அகற்ற துணை புரிகின்றது.
எனவே சப்போட்டா பழத்தை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பலமாக்கிக் கொள்ளுங்கள்.