காரமான மற்றும் சூடான உணவுகளைக் குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் உட்கொண்டு சாதனை படைப்பதற்கான முயற்சிகளில் பலரும் ஈடுபட்டு, அதில் அதிகளவானவர்கள் வெற்றி பெற்று சாதனையும் படைத்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, பலர் மிகவும் ஆபத்தான உணவு வகைகளை துணிச்சலோடு உட்கொண்டு பல சாதனைகளைப் படைத்துள்ளனர்.
அவ்வாறான சாதனை ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது மிகவும் காரமான 300 கிராம் Hot Sauceஐ ஒரு நிமிடத்திற்குள் உட்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த குறித்த இந்த நபர் ஒரு நிமிடத்திற்குள் 332.70 கிராம் Hot Sauce ஐ உட்கொண்டு சாதனை படைத்துள்ளதுடன், இவரது சாதனை கின்னஸ் உலக சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இந்த சாதனை காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதுடன் அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.