இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜோன் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்தப் படத்தின் First Look போஸ்டரை படக்குழு சில நாட்களுக்கு முன் வெளியிட்ட நிலையில்,இப்படத்தின் First Look மிகவும் வித்தியாசமாக அமைந்து, மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இந்நிலையில் ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தின் Teaser நேற்று வெளியாகியது. இந்த Teaser மிகவும் விறுவிறுப்பான காட்சிகளால் அமைந்து அதிக வரவேற்பினையும் பெற்று வருகின்றது.
அதேநேரம் இத்திரைப்படத்தின் Trailer இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில்,குறித்த Trailerஐ நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ‘பயமறியா பிரம்மை’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.