மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் வட்ஸ்அப், பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிலும் தனியான கவனம் செலுத்தி வருகின்றது.
அந்த வகையில் தற்போது, வட்ஸ்அப் ப்ரொஃபைல் பிக்சருக்கான புதிய அம்சத்தை Android , IOS பயனர்களுக்கு வழங்குகின்றது.
அதாவது புதிய அம்சத்தில், வட்ஸ்அப்பில்,ஏனைய பயனரின் ப்ரொஃபைல் பிக்சரை ஸ்கிரீன் Shot எடுப்பதை தடை செய்கிறது. முன்னதாக ப்ரொஃபைல் பிக்சரை Save செய்வதை மெட்டா நிறுவனம் தடை செய்த நிலையில், தற்போது இவ்வாறான புதிய வசதியையும் கொண்டு வரக் காத்திருக்கின்றது.
பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இந்த அம்சம் கொண்டு வரப்படுகின்றது என நிறுவனம் கூறியுள்ளது. இது IOS பயனர்களுக்கு வழங்குவதற்காக தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றது.