இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் 'தக் லைஃப்'.
இந்தத் திரைப்படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு 60% சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Helicopter-ல் இருந்து குதிக்கும் காட்சியில் நடிக்கும் போது ஜோஜு ஜார்ஜிற்கு காயமடைந்துள்ளதாகவும், அவரது கால் எலும்பு முறிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நாளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.