அண்மையில் நடைபெற்று முடிந்த IPL தொடரில் சென்னை அணிக்காக விளையாடி குறித்த தொடரின் போது கணுக்கால் வலியால் அவதிப்பட்ட ஷர்துல் தாகூர் தடுப்பூசி மூலம் வலி நிவாரணி எடுத்துக் கொண்டு IPL தொடரில் பங்கேற்றார்.
IPL முடிவடைந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். இதையடுத்து லண்டன் சென்ற ஷர்துல் தாகூருக்கு அங்கு அறுவை சிகிச்சை நடந்தது.
இதற்கு முன் இந்திய அணியின் மற்றுமொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமிக்கும் லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மொஹமட் ஷமிக்கு அறுவை சிகிச்சை செய்த அதே மருத்துவர் தான் ஷர்துல் தாகூருக்கும் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.