வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் இப்பொழுது மிக முக்கியமானவராகத் திகழ்கிறார் சாய் அபியங்கர்.இவர் பிரபல தமிழ் பின்னணிப் பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் மகன் ஆவார்.
தனது 21 ஆவது வயதில் 'கட்சி சேர' என்ற பாடலை இசையமைத்தும் அதில் பாடியும் இருந்தார்.இந்தப் பாடல் அமோக வரவேற்பைப் பெற்று இணையத் தளத்தில் வைரலாகியது. இப்பாடலில் சம்யுக்தா என்ற ஒரு பெண் நடனமாடியிருப்பார். அந்த நடனத்தில் ஒரு குறிப்பிட்ட Steps மிகப் பெரிய வைரல் ஆனது.
இப்பாடல் சமூகவலைத்தளங்களில் பல கோடிப் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப்பாடலைத் தொடர்ந்து தற்பொழுது சாய் அபியங்கர் அவரது அடுத்த பாடலான
'ஆச கூட' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பாடலையும் அவரே இசையமைத்து தன் தங்கை சாய் ஸ்மிருத்தியுடன் இணைந்து பாடியுள்ளார்.இந்த பாடலின் வீடியோ காட்சியில் 'ஸ்டார்' திரைப்படத்தில் நடித்த ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.தற்பொழுது சமூக வலைத்தளங்களில் இந்தப் பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தப் பாடலும் முதற் பாடல் போலவே கூடிய சீக்கிரத்தில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சாய் அபியங்கர் தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக காலடி எடுத்து வைக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை.