தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் விஜய்அன்டனி,இசை மட்டுமன்றி நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
விஜய் அன்டனியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறைந்த இடைவெளிகளில் வெளியாகி இரசிகர்களை கவர்ந்து வருகின்றன.அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அவரது ரோமியோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார். சத்யராஜ், மேகா ஆகாஷ், ரமணா, சரண்யா பொன்வண்ணன்,முரளி சர்மா,தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.விஜய் அன்டனி பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டப்பிங் பணிகளும் அண்மையில் முடிவடைந்த நிலையில் திரைப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது.இதனை தொடர்ந்து திரைப்படத்தின் முதல் பாடலான `தீரா மழை' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.