நடப்பு T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் நேபாள அணி ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்திருந்தது.
இந்தப் போட்டியில் நேபாளம் தோல்வியடைந்திருந்தாலும், தென்னாபிரிக்க அணிக்கு நிகராக நேபாள அணி வீரர்கள் பாரிய அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தனர்.
நேபாள அணியின் இந்த திறமையினை பலரும் பாராட்டி வரும் நிலையில் 'The Voice of Cricket' என்று அழைக்கப்படும் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, நேபாள அணியினைப் பாராட்டியுள்ள சம்பவம் வைரலாகி வருகின்றது.
“நீங்கள் தலையை உயர்த்தி வையுங்கள். நீங்கள் தென்னாபிரிக்காவை கிட்டத்தட்ட வீழ்த்திவிட்டீர்கள். உங்கள் அணிக்கென அதிகமான இரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு உங்களது ஆட்டத்தின் மூலம் நம்பிக்கை தருகிறீர்கள். எதிர்வரும் நாட்கள் உங்களுக்கு முக்கிய நாட்களாக அமையும்” என ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.