இளையதளபதி விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'The GOAT'.
இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்துவந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி ‘The GOAT’ ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இதேவேளை இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைய தாமதமாகலாம் என்பதால் ரிலீஸ் திகதியில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.