வெயில் காலங்களையும் விட மழைக் காலங்களில் நம் உடலில் பலவித நோய்த் தொற்றுகள் ஏற்படும். ஆகவே ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மைப் பாதிக்காமல் தடுக்கலாம்.
இதில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பழம் என்றால் அது கறுப்பு பேரிச்சம் பழம்.இந்த கறுப்பு பேரிச்சம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் எலும்பு சார்ந்த பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கப் பெரிதும் உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பெண்களும், ஆண்களும் மூட்டு வலிப் பிரச்சனையால் பெரிதும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இந்த கறுப்பு பேரிச்சம் பழத்தில் உள்ள மெக்னீசியம் தசை வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் தர உதவுகிறது.
கறுப்பு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கலை தடுக்கிறது.அத்தோடு உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ளலாம்.
இந்தக் கறுப்பு பேரிச்சம் பழத்தைச் சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
உங்களுடைய அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கக் கறுப்பு பேரிச்சம் பழங்களைச் சாப்பிடலாம்.இதில் உள்ள விட்டமின்கள்,தாதுக்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.