காய் வகைகளில் நிலத்திற்கு அடியில் விளையும் கிழங்கு வகையும் உள்ளடங்கியுள்ளது. அவ்வாறான ஒரு கிழங்கு வகை தான் முள்ளங்கி. இந்த முள்ளங்கியை உண்பதால் கிடைக்கும் நன்மைளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
தினந்தோறும் முள்ளங்கியை கூட்டு,பொரியல் போன்று சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள் விரைவாக நீங்கும். அத்துடன் முள்ளங்கியை உட்கொள்வதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையும் நீக்கும்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் முள்ளங்கியை பானமாகத் தயாரித்து உப்பு சேர்க்காமல் அருந்தி வந்தால் இந்நோயின் தீவிரத் தன்மை குறையும்.
எனவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த முள்ளங்கியை உட்கொண்டு பயன் பெறுவோம்.