நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி.
இந்தப் படத்தில் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் தொடர்பாக Title look தவிர வேறு எந்தவிதமான அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை.
இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படம் தொடர்பான புது அப்டேட்டினை நடிகர் அர்ஜூன் கொடுத்துள்ளார்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர்,இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இன்னும் 20 இல் இருந்து 30 சதவீத படப்பிடிப்பு மட்டுமே மீதமாக உள்ளதென தெரிவித்துள்ளார்.
அத்தோடு தொடர்ந்து பேசிய அவர்,விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜானில் இம்மாதம் ஆரம்பமாகி இருக்கிறது.அத்துடன் படப்பிடிப்பு பணிகள் முழுமை பெற்றுவிடும் என்று தெரிவித்தார்.
ஆகவே விரைவில் விடாமுயற்சி திரைப்படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகுமாமென எதிர்பார்க்கலாம்.