உலகின் முதல் உயிருள்ள கணினி, விஞ்ஞானிகள் சாதனை
SooriyanFM Gossip - உலகின் முதல் உயிருள்ள கணினி, விஞ்ஞானிகள் சாதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
'Brainoware' என்ற புதிய கணினி மனித மூளையின் நியூரான்களையும் கணினி வன்பொருளையும் இணைத்து உருவாக்கப்பட்டது. எனவே, இரண்டு பெயர்களையும் இணைத்து 'Brainoware' என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
சாதாரண கணினி சிப்பைப் போலவே இதில் சிக்னல்களை அனுப்பவும் பெறவும் முடியும். இருப்பினும், மனித மூளையில் உள்ள நியூரான்கள் சுமார் 80 ஆண்டுகள் வாழக்கூடியவை. ஆனால், இவற்றில் உள்ள நியூரான்கள் 100 நாட்கள் மட்டுமே வாழ்ந்து இறந்து விடுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தற்போது பயன்படுத்தப்படும் டிஜிட்டல் செயலிகளை விட சுமார் 10 இலட்சம் மடங்கு குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகிறது என்பது இதன் தனிச்சிறப்பு.
AI தரவு மையங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் பின்னணியில், அவற்றின் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மின் நுகர்வைக் குறைக்கும் வகையில், பரிசோதனைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.