90 களில்,பெண்களின் கனவு நாயகனாக இருந்தவர் நடிகர் அரவிந்த்சாமி.இவர் தளபதி, ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து இரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டவர்.
தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடித்து வரும் அரவிந்த்சாமி தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் "மெய்யழகன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அரவிந்த்சாமியின் 54ஆவது பிறந்தநாளை முன்னிட்டு "மெய்யழகன்" திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் போஸ்டர் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.