இத்திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், ஜோன் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜெக் ரொபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'பயமறியா பிரம்மை' திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல சினிமா கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் மிக முக்கியமான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, 'பயமறியா பிரம்மை' திரைப்படத்தின் முதலாவது பாடலான 'சாம்பல் நிற கனவுகள்' என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளது.
இசையமைப்பாளர்களான Hip hop தமிழா ஆதி, ஷோன் ரோல்டன் ஆகியோர் இன்று மாலை 06 மணிக்கு இந்தப் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளனர். இந்தப் பாடலை தமிழ் சினிமா இரசிகர் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.