சிறியா நங்கை கசப்புத்தன்மை கொண்ட ஒரு மூலிகையாகும். இந்த மூலிகை நீர்ப்பாங்கான இடங்களிலும், வயல்வெளிகளிலும் செழுமையாக வளரக்கூடியதாகும்.இந்த மூலிகை விஷத்தை முறிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
பாம்புக் கடித்தாலோ அல்லது தேள் கடித்தாலோ சிறியா நங்கை இலையை அரைத்து உருண்டையாக்கி விழுங்க வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள விஷத்தன்மை விரைவாக நீங்கும்.
சிறியா நங்கை இலைகளை எலுமிச்சைச் சாற்றுடன் சேர்த்து நன்றாக அரைத்து நம் உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிக்க வேண்டும். இது வீக்கத்தை நீக்கி சருமத்தைப் பாதுகாக்கின்றது.
சிறியா நங்கை இலை, வெந்தயம்,நெல்லிக்காய், சிறுகுறிஞ்சான் இலை ஆகியவற்றை அரைத்து ஒரு தேக்கரண்டி அளவில் தண்ணீரில் இட்டு நன்றாக வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகிவிடும்.
சிறியா நங்கை வேருடன் அறுகம்புல் வேரையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால்,சருமம் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும்.
எனவே சிறியா நங்கை மூலிகையைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வோம்.