பொலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. இவர் இறுதியாக 'கல்கி 2898 AD' திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர்சிங்கை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
இந்தநிலையில், நேற்று நடந்த ’கல்கி 2898 AD’ திரைப்பட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்வையிட்ட இரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்துவருகின்றனர். இதன்காரணமாக அவரது கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.