இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. இந்தத் திரைப்படத்தில் பொலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
அதிக பொருட்செலவில் மன்னர் காலக் கதைக்களத்தைக்கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தை இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். 3டி முறையில் சரித்திரத் திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது கம்யூட்டர் கிராஃபிக்ஸ் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை இந்தத் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் திரைக்கு வந்த பின், செலவு செய்யப்பட்ட பணத்தை விடவும் பல மடங்கு வசூல் செய்யும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.