இந்தியாவின் பெங்களூரு மாநிலத்தில் வசிக்கும் தம்பதியினர் Order செய்த பொருளுடன் பாம்பு ஒன்று வந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சில நேரங்களில் Online மூலமாக பொருட்களை Order செய்யும் போது Order செய்த பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்கள் அனுப்பப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பெரிதும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.
இந்த நிலையில், பிரபலமான தனியார் நிறுவனமொன்றில் Order செய்யப்பட்ட பொருளுடன் பாம்பு ஒன்றும் சேர்ந்து வந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தங்களுக்குக் கிடைத்த தங்களது பொருளுடன் பாம்பு இருந்ததை அவதானித்த குறித்த தம்பதியினர், அதனைக் காணொளியாக பதிவு செய்து குறித்த நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் முறையிட்டுள்ளனர்.
குறித்த பொதியில் பாம்பு உயிருடன் காணப்பட்டதுடன் இதற்காக அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ள நிலையில், அவர்களின் Orderக்கு பணம் வசூலிக்காது அதனை இலவசமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.