தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும்,குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்து,தனது சிறந்த நடிப்பினால்,மக்கள் மனதில் தனக்கென தனியிடத்தை பிடித்துக்கொண்டவர் தம்பி ராமையா.
சாட்டை, அப்பா, வினோதய சித்தம் போன்ற திரைப்படங்களில் தம்பி ராமையா மற்றும் சமுத்திரகனி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படங்களில் இவர்களது நடிப்பு இரசிகர்களைக் கவர்ந்திருந்தது.இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் சிறப்பானதாகவிருக்கும் என, பல கருத்துக்கள் இரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றன.
இந்நிலையில், தற்போது மீண்டும் 'ராஜாகிளி" என்ற புதிய திரைப்படத்தில் தம்பி ராமையா மற்றும் சமுத்திரகனி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சௌமியா ஆகியோர் நடிக்கின்றனர்.மேலும் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குநர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தை, தம்பி ராமையாவின் மகனும் பிரபல நடிகருமான உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு கதை , வசனம், திரைக்கதை, பாடல்வரிகள் உள்ளிட்டவற்றில் தம்பி ராமையா பணியாற்றியுள்ள நிலையில்,நேற்றைய நாள் நடிகர் தம்பி ராமையாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் "ராஜாகிளி" திரைப்படமானது இந்த வருடம் ஒகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
"ராஜாகிளி" திரைப்படத்தின் First Look போஸ்டர் அண்மையில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த நிலையில்,இந்த வெளியீட்டுத் திகதி அறிவிப்பும் இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
எனவே "ராஜாகிளி" திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.