வெங்கட் பிரபு இயக்கும் 'The Greatest of All Time' (கோட்) திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இவருடன் Top Star பிரசாந்த், மோகன், பிரபுதேவா,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜயின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படக்குழுவினர் காணொளியொன்றை வெளியிட்டுள்ளனர். அத்துடன் விஜய் பாடியுள்ள 'கோட்' திரைப்படத்தின் 2 ஆவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.