SooriyanFM Gossip - X-இல் வருகிறது ஸ்ட்ரீமிங் அம்சம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
438 Views
X தளத்தின் ‘பிரைவேட் லைக்ஸ்’ அம்சம் பயனர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்ததாக லைவ் ஸ்ட்ரீமிங் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த அம்சம் கட்டணம் செலுத்தும் பிரீமியம் சந்தா பயனர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.Facebook, YouTube, Twitch போன்று அல்லாமல் லைவ் ஸ்ட்ரீமிங் அம்சத்தை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கும் ஒரே தளமாக எக்ஸ் காணப்படுகிறது.
Facebook, YouTube, Twitch மற்றும் சில சமூக ஊடகத் தளங்கள் பயனர்களை இலவசமாக வீடியோ லைவ் ஸ்ட்ரீம் தொடங்க அனுமதிக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், X-இல் இணையும் புதிய பயனர்கள் போஸ்ட் பதிவிட குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் X-இல் சேர்ந்து 3 மாதத்திற்கு, இலவமாக போஸ்ட் பதிவிடலாம் என்றும் கூறியது. X தளத்தில் X Basic, Premium மற்றும் Premium+ ஆகிய சந்தாக்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.