நடிகர் சிம்பு தற்போது 'Thug Life' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக அவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48 ஆவது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அத்துடன், நடிகர் சிம்புவின் 50 ஆவது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்தத் திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இன்னும் சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதனால் அந்த திரைப்படப்பணிகள் நிறைவடைந்த பின்னரே சிம்புவின் 50 வது திரைப்படப் படப்பிடிப்பு இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளன.