நமது நாட்டில் பல வகையான காய்கறிகள் விளைகின்றன. இவற்றில் ஒரு சில காய்கறிகளை மட்டுமே நாம் அனைவரும் அன்றாட உணவுகளில் பயன்படுத்துகிறோம். எனினும் அதிக மக்களால் அறியப்படாத காய்கறி வகைகளில் கொத்தவரையும் ஒன்று. இந்த கொத்தவரையை உட்கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கொத்தவரையை உண்பதனால் உடலுக்குத் தேவையான விற்றமின்கள், தாதுக்கள் என்பன அதிகளவில் கிடைக்கின்றன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொத்தவரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் உடல் எடை சீராகக் காணப்படும்.
கொத்தவரையிலுள்ள Antioxidant என்ற வேதிப்பொருள், முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படாமல் எம்மைப் பாதுகாக்கின்றது.
கொத்தவரையில் கல்சியம் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே கொத்தவரையை உட்கொள்வதனால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும்.
இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொத்தவரை சிறந்த தீர்வாக அமைந்துள்ளது. கொத்தவரையை உட்கொள்வதனால் இதயம் பலமாகக் காணப்படும். அத்துடன் சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களும் இதனை உண்பதனால் விரைவாகக் குணமாகலாம்.
எனவே இந்த கொத்தவரையை அன்றாட உணவில் ஏதேனும் ஒரு வகையில் சேர்த்து உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.