குதிகால் வெடிப்பானது, பெரும்பாலும் வறண்ட சருமத்தால் எமக்கு ஏற்படுகிறது. எனவே, தினமும் குளித்த பின்பு உங்கள் குதிகால் பகுதியில் ஒரு நல்ல மொய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது குதிகால் வெடிப்பை வராமல் தடுக்க உதவும்.
முதலில் எப்போதும் கால்களை நன்றாகக் கழுவுங்கள்!
உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீர் மற்றும் மிருதுவான சவற்காரத்தைப் பயன்படுத்தி,மென்மையான முறையில் குதிகாலை மசாஜ் செய்த பின்பு நன்கு கழுவுங்கள்.
தேங்காய் எண்ணெயை காலுக்கு உபயோகித்திடுங்கள்!
தேங்காய் எண்ணை நீண்டகாலமாக சருமத்தை ஈரப்பதமாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, வெடிப்பு ஏற்பட்ட குதிகால்களிலும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, வெர்ஜின் தேங்காய் எண்ணெயானது, புதிய தோல் செல்களை உருவாக்கவும், காயங்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
குதிகால் வெடிப்புக்கான இயற்கை மருந்தாக, சுத்தமான தேங்காயெண்ணெயை உங்கள் குதிகால் வெடிப்புகளில் பயன்படுத்திடுங்கள்.
தேன், தயிர், வாழைப்பழத் தோல்கள் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றைப் பயன்படுத்தி கலவை ஒன்றை தயாரித்து, உங்கள் காலில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.
இவ்வகையான இயற்கைப் பொருட்கள் உங்கள் கால் சருமத்தை ஈரப்பதமாக்கும். இதனால், வெடிப்பு ஏற்படுவது குறையத் தொடங்கும்.
உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவிய பின்பு, அவற்றை மெதுவாக உலர வைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி குதிகால்களை சரியான முறையில் பராமரித்து வந்தால் குதிகால் வெடிப்புகள் வராமல் தடுக்கலாம்.