இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம், ‘இந்தியன்’. இதன் இரண்டாம் பாகம் ‘இந்தியன் 2’ தற்போது தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சிம்பு, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் அண்மையில் இத்திரைப்படப் பாடல்கள் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் Trailer இன்றையதினம் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. எனவே இந்த Trailer ஐ தமிழ் சினிமா இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.