ஆனால் கால் பாதங்களை பராமரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாதங்களை சரியாக பராமரிக்காமல் விடுவதால் வெடிப்புகள், சரும வறட்சி, போன்றவை ஏற்படுகின்றது. உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில்தான் இணைகின்றன. ஆகவே, முக அழகின் பராமரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். எனவே அவற்றை எவ்வாறு சரி செய்வதென்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
வெதுவெதுப்பான நீர் நிறைந்த பெரிய பாத்திரத்தில் ஷாம்பூ , உப்பு மற்றும் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றை விட்டு அந்தத் தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை அமிழ்த்தி வைத்து மசாஜ் செய்து பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனால் பாதங்கள் மிருதுவாக காணப்படும். மேலும் பாத வெடிப்பு உள்ளவர்கள் ஒரு கைபிடி மருதாணி இலைகளோடு, மஞ்சள் கிழங்கு அல்லது கஸ்தூரி மஞ்சள் சிறிய துண்டு சேர்த்து, நன்றாக அரைத்து, அந்தக் கலவையை வெடிப்பு உள்ள இடங்களில் பூச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால், பாத வெடிப்பு நீங்கும்.
நான்கு துளி விளக்கெண்ணெயை உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு நன்றாக தேய்த்து 2 பாதங்களிலும் தேய்த்து வர பாதம் மினுமினுப்பாக மாறும். அத்துடன் பாதங்களில் உண்டாகும் வெடிப்புகளில் கிருமிகளால் தொற்று ஏற்படக்கூடும். எளிய முறையில் கிருமிகளை நீக்குவதற்கு, ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளுடன், 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து, வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரலாம்.இதன் மூலம் கிருமிகள் நீங்கி, பாதங்களில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவை குணமாகும். எனவே இவ்வாறான இயற்கை வழிமுறைகள் மூலம் உங்கள் பாதங்களை பாதுகாத்திடுங்கள்.