காய்கறிகள் மற்றும் பழங்கள் நமது உணவின் இன்றியமையாத அம்சங்களாக உள்ளன. அவற்றை உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான பலவித ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன.பொதுவாக பரங்கிக்காயினை மக்கள் அதிகம் விரும்பி எடுத்துக்கொள்வதில்லை.ஆனால் இந்த பரங்கிக்காயின் இலை முதல் காய் வரை அனைத்தும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பரங்கிச்சாறு இரத்த நாளங்களில் உள்ள அடைப்பைப் போக்கக்கூடியது. இதனால் மாரடைப்பு உட்பட பல இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.
பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து, உடலுக்குத் தேவையான குளிர்ச்சி கிடைக்கும்.
பரங்கிக்காய் பசியைத் தூண்டுவதுடன், குடல் சம்பந்தமான பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகம் சார்ந்த பாதிப்பு உள்ளவர்கள், பரங்கிக்காய் சாற்றை குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
பரங்கி விதையை நன்கு காய வைத்த பின்னர் தூளாக அரைத்து வாரத்தில் இருமுறை உட்கொள்ள வேண்டும். இதனால் ஆஸ்துமா,மூல நோய், தாகம், வயிற்று வலி என்பன குணமாகும்.
எனவே வாரத்திற்கு இருமுறையேனும் இந்தப் பரங்கிக்காயை உட்கொண்டு,சிறந்த பலனைப் பெறுவோம்.