இவருக்கு எத்தனை வயதானாலும், இவரது ஸ்டைல் மற்றும் நடிப்பிற்கு அனைத்து வயதுப்பிரிவினருமே தீவிரமான இரசிகர்கள் தான் என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள,ரஜினியின் 171 ஆவது திரைப்படமான கூலி திரைப்படத்தின் trailer வெளியாகி இரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இத்திரைப்படத்தின் கதையானது, தங்கக் கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் கதையாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அனிருத்தின் அட்டகாசமான இசையமைப்பில் வெளிவரவுள்ள இத்திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே இருக்கின்றது.
அண்மையில் கூலி திரைப்படங்கள் குறித்த எந்த அப்டேட்களும் வெளியாகாத நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படமொன்றை வெளியிட்டு,அத்துடன் அதில் கூலி திரைப்படம் தொடர்பான ஒரு தகவலையும் குறிப்பிட்டுள்ளார்.
அதில், கருப்பு மீசை வெள்ளைத் தாடியுடன்,சற்று வித்தியாசமான மற்றும் மிகவும் அழகான லுக்கில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கின்றார்.அவருக்குப் பின்னால் லோகேஷ் கனகராஜ் நின்று,ரஜினியை புகைப்படம் எடுப்பதைப்போன்று காணப்படும், குறித்த புகைப்படத்தைப் பதிவிட்டு, "கூலி" திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஜூலை மாதத்தில் ஆரம்பமாகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மட்டற்ற மகிழ்ச்சியில் இதனைப் பார்வையிட்ட இரசிகர்கள் அனைவரும், இத்திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக காத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.