இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று ’கல்கி 2898 AD’ திரைப்படம் உலககெங்கும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் படக்குழுவினர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
இந்த அறிக்கையில், ’கல்கி 2898 AD’ திரைப்படம் 4 வருட கடின உழைப்பின் பின்னர் உருவாகியிருப்பதனால், இதனை திருட்டு இணையதளங்களின் மூலம் பார்வையிடுவதைத் தவிர்த்து, திரையரங்குகளில் பார்வையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
’கல்கி 2898 AD’ திரைப்படத்தைப் பார்வையிட்ட இரசிகர்கள், இத்திரைப்படம் குறித்து நல்ல விமர்சனங்களைப் பகிர்ந்து, தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.