SooriyanFM Gossip - அஜித்தின் புதிய திரைப்பட அப்டேட் வெளியானது !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
786 Views
நடிகர் அஜித் குமார்,மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும்நிலையில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்,ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி இரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன், அடுத்தாண்டு பொங்கலுக்கு இத் திரைப்படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று மாலை 6.40 மணியளவில் "குட் பேட் அக்லி" திரைப்படத்தின் அப்டேட் வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
வெளியாகவிருக்கும் அந்தப் புதிய அப்டேட்,திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.