இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெற்ற பரீட்சை ஒன்றில், இதயத்தின் படத்தினை வரைந்து அதன் பாகங்களைக் குறிப்பிடுக எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, மாணவர் ஒருவர் வழங்கிய பதில் அனைவரையும் நகைப்பிற்குள்ளாக்கியுள்ளது.
குறித்த கேள்விக்கு இதயத்தின் படத்தினை வரைந்துள்ள அந்த மாணவர், இதயத்தினை 4 அறைகளாகப் பிரித்து அதில் தன்னுடைய தோழிகளின் பெயர்களை எழுதியுள்ளதுடன், அவர்களைப் பற்றி விரிவான விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட இந்த இதய வரைபடம் சுமார் 64.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.
இதயத்தின் நான்கு பாகங்களிலும் ஹரிதா, பிரியா, ரூபா, நமீதா, பூஜா என தனது தோழிகளின் பெயர்களை எழுதியுள்ள அவர் அவற்றின் செயற்பாடுகளுக்கு அவர்களின் பெயர்களை வைத்துள்ளார்.
குறித்த இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் நகைப்பிற்குள்ளாக்கியுள்ளது.