மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருகின்ற
இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சரித்திரத் திரைப்படமாக உருவாகும் 'கங்குவா' திரைப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில், இத்திரைப்படம் குறித்த மிக முக்கியமான ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது 'கங்குவா' திரைப்படம் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக, படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
குறித்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.