Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
30
இந்தியா இரண்டாவது முறையாகவும் சம்பியனானது!

SooriyanFM Gossip - இந்தியா இரண்டாவது முறையாகவும் சம்பியனானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

292 Views
மேற்கிந்திய தீவுகளின் ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் 7 ஓட்டங்களால் தென்னாபிரிக்காவை வெற்றிகொண்ட இந்தியா, T20 உலகக் கிண்ணத்தை 2ஆவது தடவையாக தன் வசப்படுத்தியது. 

தென் ஆபிரிக்காவில் 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் T20 உலகக் கிண்ணப் போட்டியில், தோனி தலைமையில் சம்பியனான இந்தியா இப்போது 17 வருடங்களின் பின்னர் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இரண்டாவது தடவையாக உலக சம்பியனானது.

விராட் கோலி குவித்த அபார அரைச்சதம், பாண்டியாவின் கடைசி ஓவர் உட்பட கட்டுப்பாடான பந்துவீச்சு, பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்தியாவை சம்பியனாக்கியது.

முதலில் துடுப்பெடுத்ததாடத் தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

விராட் கோலி, அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணிக்கு உயிர்ப்பைக் கொடுத்தனர்.விராட் கோலி 59 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைக் குவித்தார். அக்சார் பட்டேல் 31 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்களுடன் 47 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அன்றிச் நோக்கியா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 20ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வி அடைந்தது.

ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஹென்றிச் க்ளாசன் 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

கடைசி ஓவரில் தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு மேலும் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஹர்திக் பாண்டியாவின் முதல் பந்தை சிக்ஸாக விளாசி அடிக்க டேவிட் மில்லர் முயற்சித்தார். ஆனால், பவுண்டறி எல்லையில் சூர்யகுமார் யாதவ் பந்தைப் பிடித்து உள்ளே எறிந்துவிட்டு வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்து பந்தைப் பிடிக்க, டேவிட் மில்லர் ஆட்டம் இழந்தார். அத்துடன் தென்னாபிரிக்காவின் வெற்றிக் கனவு கலைந்துபோனது.

அடுத்த 5 பந்துகளில் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்திய பாண்டியா இந்தியா உலக சம்பியனாவதை உறுதிசெய்தார். இதேவேளை, விராட் கோலி ஆட்டநாயகன் விருதுடன் T20 உலகக் கிண்ண சம்பியன் பட்டத்துடன் விடைபெற்றார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top