மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான Whatsapp உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், Whatsapp அண்மையில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை அறிமுகம் செய்தது.
Whatsapp வீடியோ Call இல் இருக்கும் போது, உங்கள் Phone திரையை ஸ்கிரீன் ஷேர் செய்யலாம். குறிப்பாக இது காரியாலயப் பயன்பாடுகள், நண்பர்களுடன் பேசும் போது பயன்படும்.
Android போன் பயனர்கள் Whatsapp ஸ்கிரீன் ஷேர் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1. முதலில் Whatsapp ஐ Open செய்து தனிநபர்கள் அல்லது குரூப் வீடியோ Call செய்யவும்.
2. இப்போது டிஸ்பிளேயின் கீழே உள்ள ஸ்கிரீன் ஷேரிங் ஐகன், போன் உடன் ஏரோ இருப்பது போல் இருக்கும் ஐகனை கிளிக் செய்யவும்.
3. இப்போது உங்கள் ஸ்கிரீன் ஷேர் செய்வதை Confirm செய்யவும்.
4. இதன் பின் உங்கள் போன் ஸ்கிரீன் மற்றவருக்கும் காண்பிக்கும்.
5.இப்போது நீங்கள் ஃபைல்கள், ஆவணங்கள் போன்றவற்றை மற்றவர்களுக்கு காண்பித்து விளக்கலாம்.
6. ஸ்கிரீன் ஷேரிங் செய்வதை நிறுத்த Whatsapp க்கு வந்து ஸ்டொப் ஸ்கிரீன் ஷேரிங் கொடுக்கவும்.
7. அவ்வளவு தான் இப்போது வீடியோ Call ஒப்ஷனுக்கு மாறிவிடும்.
இந்த படிமுறைகளைப் பயன்படுத்தி இலகுவாக நீங்களும் பயன்படுத்தலாம்.