மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
நேற்று இத்திரைப்படத்தின் Firstlook poster வெளியாகி, குறித்த போஸ்டரானது வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் முகாமையாளர் சுரேஷ் சந்திரா, இத்திரைப்படத்தின் மிக முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது நடிகை த்ரிஷா 'விடாமுயற்சி' திரைப்படத்தில் அஜித்திற்கு மனைவியாக நடிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இத்திரைப்படத்தில் அஜித்தும் த்ரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கவுள்ளமை உறுதியாகியுள்ளது.