புதினா ஒரு அற்புதமான மருத்துவக் குணம் நிறைந்த ஒரு கீரையாகும். புதினாவானது பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்களால் உணவாகவும், மருத்தாகவும் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புதினாவானது ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகைக் கீரையாகும். இதனை தினமும் உட்கொண்டால் உடலிற்கு நல்ல நன்மைகளை வழங்குமாம்.
அந்தவகையில், புதினாவில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகளை நாம் அறிந்து கொள்வோம்.
குடற் புண், வயிற்றுப் புண், தொண்டைப் புண், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு, புதினா சிறந்த தீர்வாக அமையும்.
புதினாக் கீரையினை ஜூஸாகவோ அல்லது சூப்பாகவோ எடுத்துக் கொண்டால் உடற்பருமன் பிரச்சினை உள்ளவர்களின் உடல் எடையானது குறைவடையும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பூச்சிகள் மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சினைகளுக்கு இந்தப் புதினாக் கீரை சிறந்ததாகும்.
சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று உண்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
தினமும் புதினா இலைகளைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தம் மற்றும் பிற உறுப்புகளில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறி, உடலிற்குப் புத்துணர்ச்சி தந்து, நம்மைப் பாதுகாத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.