இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மனைவியிடம் வரதட்சணையாக ஒரு ரூபாவினையும் ஒரு தேங்காயையும் பெற்றுக்கொண்டார். வரதட்சணை என்ற பழக்கத்தை ஒழிக்கவேண்டும் என்பதற்காகவே தான் இவ்வாறு செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் தனது மனைவியின் சம்பளத்திலிருந்தும் தனக்கு எதுவும் தேவையில்லை என்றும், அதனைத் தனது மனைவியின் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ள அவர், தனது குடும்பத்தைத் தன்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொறியியலாளராக பணியாற்றி வரும் குறித்த மணமகன், வரதட்சணை இல்லாத திருமணத்தைத் தானே முன் மொழிந்ததாகவும், அதைத் தனது குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டதாகவும், தனது மனைவியை முதுகலை வரை படிக்க வைத்ததற்காக, தனது ஒரு வருட சம்பளத்தை மனைவியின் பெற்றோருக்கு கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த தம்பதியினருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், இந்த மணமகனுக்கு பலரும் தங்கள் ஆசீர்வாதங்களைத் தெரிவித்து வருகின்றனர்.