அதனைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி, பொலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து மீண்டும் ஒரு பொலிவுட் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, நடிகர் கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அட்லியின் குறித்த திரைப்படத்தில் நடிகர் சல்மான்கான் நடிப்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், குறித்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பாரா? அல்லது நடிகர் கமல்ஹாசன் நடிப்பாரா? என்ற குழப்பம் தற்போது நிலவ ஆரம்பித்துள்ளது.
இந்தக் குழப்பத்திற்கு, விரைவில் சரியான பதில் இயக்குநர் அட்லியிடம் இருந்து கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.