எனவே முகத்தில் உள்ள முடிகளை இயற்கையான முறையில் எவ்வாறு நீக்குவது என்று இந்தப் பதிவில் காணலாம்.
பொதுவாக மஞ்சள், முட்டை, கடலை மா போன்ற இயற்கைப் பொருட்கள் இயற்கையாகவே தேவையற்ற முடிகளை நீக்குவதோடு காலப்போக்கில் அதன் வளர்ச்சியையும் குறைக்கிறது. அத்துடன் ஒரு தேக்கரண்டி தேனில் எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி வந்தாலும் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றமுடியும். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி சீனியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை 3 நிமிடங்கள் சூடாக்க வேண்டும். பின்பு இந்த பேஸ்ட்டை வெதுவெதுப்பான நிலையில் முடிகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.இவ்வாறு செய்வதன்மூலம் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு முகமும் பொலிவுறும்.
முகத்தில் உள்ள முடி நீங்க மைசூர் பருப்பை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் பால், தேங்காய் எண்ணெய் கலந்து இந்தக்கலவையை முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக்கழுவ வேண்டும். எனவே இவ்வாறான இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி வந்தாலே முகத்தில் முடி வளருவதை எம்மால் கட்டுப்படுத்த முடியும்.