SooriyanFM Gossip - எலும்புகளைப் பலப்படுத்தும் தவசிக்கீரை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
499 Views
தவசிக்கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, மாவுச்சத்து என பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இக்கீரையை பச்சையாகவும் உண்ணலாம். இந்தக் கீரையின் இலைகளும் தண்டுகளும் சமைத்து உண்பதற்குப் பயன்படுகின்றன. நம் உணவில் இக்கீரையைச் சேர்த்துக்கொள்வது ஒரு சிறந்த ஆரோக்கியமான வாழ்விற்கு உகந்ததாகும். தவசிக்கீரை சிறுவர்களின் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் எலும்புகளைப் பலப்படுத்துகின்றது. அத்துடன் கண் பார்வையை கூர்மையாக்கி அசதியையும் நீக்குகின்றது.
தவசிக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் இரத்தசோகை குணமாகும். இந்தக் கீரையின் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து அதனை சிறிதளவு தேனுடன் கலந்து அருந்துவதனால் உடல் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
இந்தக் கீரையில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளதால், சருமப் பிரச்சினையிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அத்துடன் இந்தக் கீரையை உட்கொள்வதனால் நரம்புத்தளர்ச்சி நீங்கி உடலும், தசையும் உறுதி பெறும்.
எனவே மகத்தான நன்மைகளை அள்ளித்தரும் தவசிக்கீரையை உட்கொண்டு பலன் பெறுவோம்.