நீங்கள் அடிக்கடி WhatsApp இல் அழைப்புகளை மேற்கொள்பவர் என்றால், இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதாவது மெட்டா நிறுவனம் ஆக்மென்டட் ரியாலிட்டியை (AR) WhatsApp பிளட்ஃபோர்மில் கொண்டு வருகிறது. இந்த Technology மூலம் புதிய அவதார்களை உருவாக்கி, WhatsApp வீடியோ கோல்களை சிறந்த முறையில் பயன்படுத்தலாம்.
இதில், பல வகையான Effects மற்றும் Filtersகளை அணுகக்கூடியதாக இருக்கும். அழைப்பின் போது, பயனர்கள் வேடிக்கையான பில்டர்களைச் சேர்க்கலாம். இந்த அம்சங்கள் காட்சி அனுபவத்தை மேம்படுத்தவும், வீடியோ செட்டிங்கை மிகவும் வேடிக்கையாகவும் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனுடன், அழைப்பின் போது உங்கள் Background ஐ திருத்தும் திறனையும் WhatsApp மேம்படுத்துகிறது. Conference அல்லது குழு உரையாடல்களுக்கு ஏற்ற Game Changer செட்டிங்ஸாகவும் இது இருக்கும்.
WhatsApp வீடியோ உரையாடலில் மற்றவர்களுக்கு முகத்தை நீங்கள் காண்பிக்க விரும்பவில்லை என்றால், அந்த நொடியில் அவதாராக மாற்ற முடியும்.
தற்போது, இந்த AR அம்சங்கள் இன்னும் வளர்ச்சி நிலையில் உள்ளன, எனவே அதன் வெளியீட்டு திகதி குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.