SooriyanFM Gossip - என் கனவு நனவாகிய தருணம் - அபிஷேக் சர்மா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
518 Views
இந்திய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட போது முதல் ஆளாக சுப்மன் கில் தான் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதாக இளம் வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்திய அணிக்கு அறிமுகமாகவுள்ள அபிஷேக் சர்மா குறித்த விடயம் தொடர்பில் பேசுகையில் - சிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், சுப்மன் கில் தான் முதல் ஆளாக எனக்கு தொலைபேசியில் அழைத்தார்.
அதன்பின் நான் வீட்டிற்குச் சென்று நேர்காணல் கொடுப்பதற்கு முன்பாகவே, எனது பெற்றோர் இருவரும் நேர்காணல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.
அதனைப் பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாள் முதல் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவு.
அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தேன். இந்திய மண்ணில் அறிமுகமாவேன் என்று தான் நினைத்திருந்தேன். சிம்பாப்வே மண்ணில் அறிமுகமாவது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.