கடைசியாக தனுஷின் நடிப்பில் வெளியான "கேப்டன் மில்லர்" திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.எனவே அவரின் அடுத்த படமான "ராயன்" திரைப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாகக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்து வருகின்றார் நடிகர் தனுஷ்.
பா.பாண்டி படத்திற்குப் பின் நடிகர் தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்குகிறார்.இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலும் இரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், எஸ்.ஜே சூர்யா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களே இப்படத்தில் நடித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.எனவே பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடம் இருக்கின்றது.இந்நிலையில் தனுஷின் "ராயன்" திரைப்படம் இம்மாதம் 26 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷின் பிறந்தநாள் இம்மாதம் 28 ஆம் திகதி வரவிருக்கும் நிலையில் அதற்கு முன்னரே "ராயன்" திரைப்படம் வெளியாவது இரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
அதேநேரம் "ராயன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் வரும் 6 ஆம் திகதி நடைபெறவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்புகளால் தனுஷ் இரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.