77 ஆவது Locarno திரைப்பட விழாவில், உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஷாருக்கான் தனது தனித்துவமான திறமையினாலும் நடிப்பினாலும் உலகம் முழுவது ஏராளமான இரசிகர்களை தன்னகத்தே வைத்துள்ளார்.
இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'பதான்' மற்றும் 'ஜவான்' போன்ற திரைப்படங்கள் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்தநிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘லோகார்னோ திரைப்பட விழாவிலேயே இவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் இந்த விருதினை இத்தாலி இயக்குநர் பிரான்செஸ்கோ ரோசி, அமெரிக்க பாடகர் மற்றும் நடிகர் ஹரி பெலாஃபோன்டே மற்றும் மலேசிய இயக்குநர் சாய் மிங்-லியாங் ஆகியோர் பெற்றிருந்தனர்.
இதேவேளை, விழாவின் மிக உயரிய விருதான 'Pardo alla Carriera Ascona-Locarno' எனும் வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விழாவின் போது ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘தேவதாஸ்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.