நடிப்பைத் தாண்டி தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களைத் தயாரித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் "அமரன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,கடந்த 2022 ஆம் ஆண்டு "டான்" படம் மூலம் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் மற்றும் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இதற்கிடையில் இந்தப் படத்திற்கு 'பாஸ்' (BOSS) எனப் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.