SooriyanFM Gossip - இந்த உலகக் கிண்ணம் எனக்கு மிகவும் நெருக்கமானது - ரோஹித் சர்மா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
646 Views
2024 T20 உலகக் கிண்ணத்தை இந்தியாவிற்கு எடுத்து வந்த தலைவர் ரோஹித் சர்மா அதனை சிறு குழந்தையைப் போல பார்த்துக் கொண்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பின்பு மும்பை விமான நிலையம் வந்த பின்பு ரோஹித் சர்மா, T20 உலகக் கிண்ணத்தை இரசிகர்களுக்கு தெரியும்படி தூக்கிக் காண்பித்தார்.
அதன் பின்பு அதனை விமான நிலைய அறையில் வைத்து, அதன் மேல் இருந்த சிறிய தூசி மற்றும் கறைகளை நீக்கினார். ஒரு குழந்தையை சுத்தம் செய்வதை போல, "பூ மாதிரி" உலகக் கிண்ணத்தை சுத்தம் செய்தார். அதை அருகில் நின்று பார்த்த காவலர்கள் முகத்தில் பெரும் வியப்பும், மகிழ்ச்சியும் இருந்தது.
மும்பை விமான நிலையத்திலிருந்து வன்கடே மைதானம் வரை திறந்த வெளி பேருந்தில் இரசிகர்கள் மத்தியில் பயணம் செய்தனர். வன்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதனிடையே தான் மும்பை விமான நிலையத்தில் உலகக் கிண்ணத்தின் மீது படிந்திருந்த தூசியை சுத்தம் செய்தார் ரோஹித் சர்மா. இந்த உலகக் கிண்ண வெற்றி குறித்து அவர் பேசுகையில், "தனது தலைமைத்துவத்தில் வென்றதால் இந்த உலகக் கிண்ணம் தனக்கு மிகவும் நெருக்கமானது" என்று தெரிவித்துள்ளார்.