இந்திய சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ்.இவருடைய யதார்த்தமான நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் இரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்றே சொல்லலாம்.
நடிகர் தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக தன்னுடைய திறமையை, திரைத்துறையில் வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது 50 ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இத்திரைப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது.இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
மேலும், கடந்த மே 9 ஆம் திகதி ஏர்.ஆர் ரஹ்மான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படம் இம்மாதம் 26ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகியது.
இத்திரைப்படத்தின் 'ராயன் ரம்பில்' என்ற பாடல் நேற்றைய தினம் வெளியாகியது. இப்பாடல் இரு Rap பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அறிவு எழுதி பாடியுள்ளார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூலை 6 ஆம் திகதி) தனியார் பொறியியல் கல்லூரியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.